தேடல்

அடிப்படை வசதிக்கு வலியுறுத்தல்

ஊட்டி : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஊட்டி நகர கிளை கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:ஊட்டி28வது வார்டுக்கு ஒதுக்கும் நிதியை குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு மட்டும் பயன்படுத்தாமல், அனைத்து பகுதிகளுக்கும் பயன்படுத்தி அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்.முள்ளிக்கொரை பகுதியில் உள்ள இருட்டு காலனியில் பகுதிக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்க நிர்வாகி கிருஷ்ணன் தலைமை வகித்தார். சுரேஷ்குமார், ஸ்ரீகாந்த், சக்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஸ்டெர்லிங் பயோடெக் ஏ.ஐ.டி. யு.சி., பொது செயலாளர் மூர்த்தி, நகர துணை செயலாளர் நாகராஜ், கிளை செயலாளர் இருதயராஜ், துணை செயலாளர் மணி, பொருளாளர் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சிக்ராஜ் நன்றி கூறினார்.