தேடல்

அணைகளில் நீர்வரத்து இல்லைவிவசாயத்திற்கு திறப்பு எப்போது

மதுரை:தென்மேற்கு பருவமழை தாமதம் ஆவதால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயராத நிலையில், பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்

படுவது தாமதமாகிறது.வழக்கமாக, ஜூன் 1ம் தேதி, முதல்போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். கேரளாவில் இந்தாண்டு, பருவமழை பெய்வது

தாமதமாகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 111 அடியாக உள்ளது. வைகை அணையில் 45.3 அடி தண்ணீர்தான் உள்ளது. கடந்தாண்டு இதே÷

நரத்தில் பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.10 அடியாகவும், வைகையில் 49.18அடியாகவும் இருந்ததால், தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறப்பு

தாமதமாவதால், முதல்போக சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது. பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, முல்லைப்பெரியாறு அணையில் 112

அடி இருந்தால், தண்ணீர் திறக்கப்படும். தற்போது நீரின் அளவு குறைவாக உள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு ஜூன் 25ல் 200 கனஅடி தண்ணீர், திறந்து

விடப்படலாம். வைகை அணையில் 4 டி.எம்.சி., தண்ணீர் இருக்க வேண்டும். தற்போது 2 டி.எம்.சி., அளவு இருப்பதால், மழையை நம்பி தான் முடிவெடுக்க

முடியும். நீர்வரத்து அடிப்படையில் அரசு முடிவெடுக்கும், என்றனர்.நேற்று முன்தினம் பெய்த மழையளவு (மி.மீ.,) கொடைக்கானல் 54.4 மி.மீ., முல்லைப்

பெரியாறு 15.2, தேக்கடி 2.4, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 18, பேரணை 12, ஆண்டிபட்டி 4, சாத்தையாறு 10 மி.மீ.,