மும்பை: நடப்பு ஜூலை, 27ம் தேதி வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்கு சந்தைகளில் மேற்கொண்ட நிகர முதலீடு, 8,400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேசமயம், பங்கு சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில், இந்நிறுவனங்களின் முதலீடு குறைந்திருந்தது.பங்கு விற்பனைநடப்பு ஜூலை மாதத்தில், 27ம் தேதி வரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், 44,192 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. அதேசமயம், 35,768 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பங்குகளை விற்பனை செய்துள்ளன. ஆக, இந்நிறுவனங்களின் நிகர முதலீடு, 8,424 கோடி ரூபாயாக உள்ளது. இந்நிறுவனங்கள், கடன் பத்திரங்களில், ஜூலை மாதத்தில், 3,187 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன என, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தென் மேற்கு பருவ மழை குறைந்துள்ளதால், நாட்டின் மேற்கு மாநிலங்களில் வேளாண் சாகுபடி மிகவும் மந்தமடைந்துள்ளது. மேலும், நாட்டின் பொருளாதாரத்திலும் மந்த நிலை நிலவுகிறது. இந்நிலையிலும், பிரதமர் மன்மோகன் சிங், நிதி துறையையும் கவனித்து வருகிறார். இவர், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையால், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றன, என, இத்துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.குறிப்பாக, மழைக்கால பார்லிமென்ட் கூட்டத்தொடர், ஆகஸ்ட் 8ம் தேதி துவங்கப்பட உள்ளது. இதற்கு முன்பாக, பல்வேறு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என, சந்தையில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.பதிவு öŒ#த நிறுவனங்கள்நடப்பு ஜூலை மாதத்தில், 27ம் தேதி வரையிலுமாக, மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், 591 புள்ளிகள் அல்லது 3.3 சதவீதம் உயர்ந்துள்ளது. நடப்பு 2012ம் ஆண்டில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், ஒட்டுமொத்த அளவில் பங்கு சந்தைகளில், 50,417 கோடியையும், கடன் பத்திரங்களில், 24,048 கோடி ரூபாயையும் முதலீடு செய்துள்ளன."செபி' அமைப்பிடம், ஜூலை 27ம் தேதி நிலவரப்படி, 1,756 அன்னிய நிதி நிறுவனங்கள் பதிவு செய்து கொண்டுள்ளன. இதே காலத்தில், பதிவு செய்து கொள்ளப்பட்ட துணை கணக்குகளின் எண்ணிக்கை, 6,341 ஆக உள்ளது என,"செபி' தெரிவித்துள்ளது.
அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.8,400 கோடி முதலீடு
தினமலர் – தி, 30 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 4 மணிநேரம் முன்கூடங்குளம் அணு மின் நிலையம் அணு சக்தி கழகம் விளக்கம்
தினமலர் - 4 மணிநேரம் முன்ஐந்து ஆண்டில் மதுபான வருவாய் இரண்டு மடங்காக உயர்வு
தினமலர் - 4 மணிநேரம் முன்உள்நாட்டில் கச்சா சணல் விலை சரிவடையும்
தினமலர் - 5 மணிநேரம் முன்ஏற்றுமதியை மேம்படுத்தவெளியுறவு அமைச்சகம் திட்டம்
தினமலர் - 5 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

