தேடல்

அனுமதியின்றி பட்டாசு விற்றவர் கைது

பொன்னேரி : அரசு அனுமதியின்றி, பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்றவரை, போலீசார் கைது செய்தனர். பொன்னேரி தாயுமான் செட்டி தெருவில், பேன்சி பொருட்கள் விற்பனை செய்து

வருபவர், அப்துல் வகாப் மகன் பக்கிரி முகம்மது, 49. இவர், தீபாவளி மற்றும்

கோவில் திருவிழாக்களின்போது, பட்டாசு விற்பனையில் ஈடுபட்டு வந்தார்.

இவர், தனது கடைக்குள் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகளை பதுக்கி வைத்து, விற்பனை செய்

வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் பொன்னேரி எஸ்.ஐ.,

ரஜினிகாந்த் மற்றும் போலீசார், கடையில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது அனுமதியின்றி, பட்டாசுகளை பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

இதையடுத்து, போலீசார், பக்கிரி முகம்மதுவை கைது செய்தனர்.

விற்பனைக்காக வைத்திருந்த, ராக்கெட், தோரணம், வெடி உள்ளிட்ட பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.