அமெரிக்க அதிகாரிகளுக்கு ஆந்த்ராக்ஸ் பவுடர்?

வாஷிங்டன் : அமெரிக்க சட்டஅறிஞர்ககள், செனட் உறுப்பினர்கள் மற்றும் ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் என பலருக்கு மர்மகடிதம் வந்துள்ளது. அக்கடிதத்துடன், வெள்ளை நிற பவுடர் ஒன்றும் வந்துள்ளது. அந்த பவுடரில் ஆந்த்ராக்ஸ் கிருமிகள் உள்ளதாக ஏற்பட்ட பீதியை அடுத்து அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணைக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதுபோன்று, 100 கடிதங்கள், 100 முக்கிய பிரமுகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில், 10 கடிதங்களில் கொடிய நோய்க்கிருமிகள் அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம், பலர் நோய்த்தாக்கலுக்கு ஆளாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.