தேடல்

அரசு ஊழியர் சங்கம் சார்பில் பிரச்சார இயக்க துவக்க விழா

ஓசூர்: ஓசூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பிரச்சார இயக்க

துவக்க விழா நடந்தது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஜூலை 20ம்

தேதி, சென்னையில் கோரிக்கை விளக்க பேரணி நடக்கிறது. கொடியகரை, கூடலூர்,

களியாக்காவிளை, ராமேஸ்வரம் மற்றும் ஓசூர் ஆகிய ஐந்து இடங்களில் இருந்து

பிரச்சார இயக்கம் துவங்கி, சென்னையை சென்றடைகிறது.ஓசூர் நகராட்சி அலுவகலம்

முன் பிரச்சார இயக்க துவக்க விழா நடந்தது. மாநில பொருளாளர் கணபதி,

துணைத்தலைவர் வித்திராஜன், மாநில செயலாளர் கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்து,

கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் ஜெயராமன் வரவேற்றார். சி.ஐ.டி.யூ., கருணாநிதி,

பி.எஸ்.என்.எல்., பாரதி, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி விஜயகுமார்,

விவசாயிகள் சங்கம் கோதண்டராமன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

அஸ்வத்நாராயணன், வட்ட தலைவர் ஆனந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாநில

செயலாளர் கண்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், ஒரு லட்சத்து 70

அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.

மக்களுடைய தேவைக்கு ஏற்ற புதிய பணியிடங்களை, பேச்சுவார்த்தை மூலம்

நிறைவேற்றி, அரசு அனைத்து துறைகளிலும் உருவாக்க வேண்டும். பெட்ரோல், டீஸல்

மற்றும் உணவு பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தி, பொது மக்களை பாதுகாக்க

வேண்டும்.

இவ்வாறு கூறினார்.