தேடல்

அரசியல் தலைவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் அல்ல:ஹசாரே

புதுடில்லி : இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் 2014ம் நடைபெற உள்ள தேர்தலில் லோக்பால் முக்கிய பங்கு வகிக்கும் எனவும், அனைத்து அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சில நல்ல தலைவர்களும் இருப்பதாகவும், அதே போன்று அனைவரும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் கூறினார். தானும், ராம்தேவும் மட்டுமின்றி அனைவரும் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றார்.