தேடல்

அர்ஜூன் கபூருடன் ப்ருத்விராஜ் இணைந்து கலக்கும் அவுரங்கசிப்!

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் ப்ருத்விராஜ், தற்போது இந்தியில் தனது முதல்படமாக ராணி முகர்ஜியுடன் ஐயா என்ற படத்த்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிவதற்குள்ளேயே இன்னொரு பாலிவுட்டில் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. பிரபல ‌தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா இயக்கும் இப்படத்திற்கு அவுரங்கசிப் என்று பெயர் வைத்துள்ளதாகவும், இதில் ப்ருத்விராஜூடன் பிரபல இந்தி நடிகர் அர்ஜூன் கபூரும் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். இதுகுறித்து ப்ருத்விராஜ் கூறுகையில், ஆமாம்! நான் ஆதித்யா சோப்ரா இயக்கும் அவுரங்கசிப் படத்தில் நடிக்கிறேன். என்னுடன் அர்ஜூன் கபூரும் நடிக்கவுள்ளார் என்று கூறியுள்ளார்.