அல்ஜியர்ஸ்: ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில், ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதில், 35 பிணைய கைதிகளும், 15 கடத்தல்காரர்களும் கொல்லப்பட்டனர்.ஆப்ரிக்க நாடான மாலியில், அல்-குவைதா ஆதரவுடன் செயல்படும், பயங்கரவாதிகள், கயோ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றினர். இந்த பயங்கரவாதிகளை சமாளிக்க, மாலி அரசு, பிரான்ஸ் நாட்டின் உதவியை நாடியது.இதையடுத்து, கடந்த வாரம், மாலிக்கு விரைந்த பிரான்ஸ் படைகள், விமானம் மூலம் குண்டு வீசி, பயங்கரவாதிகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்டன. இந்த தாக்குதலில், 100க்கும் அதிகமான, பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மாலியில், நிலைமை சீராகும் வரை தங்கியிருக்க, பிரான்ஸ் படைகள் முடிவு செய்துள்ளன.பிரான்ஸ் நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மாலியின் அண்டை நாடான அல்ஜீரியாவில் உள்ள, எண்ணெய் நிறுவனத்தின் மீது, பயங்கரவாதிகள் நேற்று முன்தினம், தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார்; ஏழு பேர் படுகாயமடைந்தனர்.பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமான, பிபி நிறுவனத்தில் பணிபுரிந்த, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் ஊழியர் உட்பட, 50க்கும் அதிகமானவர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.கடத்தல்காரர்கள் பதுங்கியிருந்த பகுதியில், அல்ஜீரிய ராணுவம், நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், பிணை கைதிகள், 35 பேரும், கடத்தல்காரர்கள், 15 பேரும் கொல்லப்பட்டனர். 26 பிணைய கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
அல்ஜீரியாவில் அதிரடி நடவடிக்கை பிணைய கைதிகள் உட்பட, 50 பேர் பலி
தினமலர் – வெ, 18 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
வெளிநாட்டு படக்குழுவுக்கு சிரஞ்சீவி அழைப்பு!
தினமலர் - 1 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்அணி உரிமையாளரின் உறவினருடன் வின்டூவுக்கு தொடர்பா
தினமலர் - 2 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்காதலியின் சம்மதத்துடன் உடலுறவு; பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட்
தினமலர் - 2 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு
தினமலர் - 3 மணிநேரம் முன்ரூ. 5000 கோடிக்கு டம்ப்ளர் இணையதளத்தை வாங்கும் யாகூ
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

