அவுரா வங்கியிலிருந்து ரூ. 42 லட்சம் கொள்ளை

அவுரா : மேற்குவங்க மாவட்டம் அவுரா பகுதியில் உள்ள கிராம வங்கியில், ரூ, 42லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று காலை, வங்கியை திறக்க ஊழியர்கள் சென்ற போது, வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, ரூ. 42 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.