சென்னை : தேசிய முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் சங்மா, அ.தி.மு.க.,-
எம்.ஏல்.ஏ.,க்கள்,- எம்.பி.,க்களிடம் இன்று ஆதரவு கேட்கிறார். முதல்வர்
ஜெயலலிதாவைச் சந்தித்தும், அவர் பேச உள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக சங்மாவை
அறிவித்து, பிற கட்சிகளிடமும் முதல்வர் ஜெயலலிதா ஆதரவு கேட்டார்.
இதையடுத்து, பா.ஜ.,வும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும், சங்மாவை வேட்பாளராக
ஏற்றுக் கொண்டன. சங்மா, ஒவ்வொரு மாநிலமாகச் சென்று, எம்.பி., மற்றும்
எம்.ஏல்.ஏ.,க்களை சந்தித்து, ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில்,
அ.தி.மு.க.,- எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்களிடம் ஓட்டு கேட்க, சங்மா இன்று
சென்னை வருகிறார். முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தும், அவர் ஆதரவு
திரட்டுகிறார். எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள்,-
எம்.பி.,க்கள் கூட்டம், அ.தி.மு.க., தலைமை நிலையத்தில், இன்று மாலை
நடக்கிறது. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் கூட்டத்துக்கு தலைமை
வகிக்கிறார். முதல்வர் ஜெயலலிதா, ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் கொள்கை
முடிவை விவரிப்பதோடு, ஓட்டளிக்கும் முறை குறித்து, எம்.பி.,-
எம்.எல்.ஏ.,க்களிடம்விளக்க உள்ளார்.
