ஆக்கிரமிப்பு நிலத்தைமீட்டு மரம் நடும் பணி

காங்கேயம்: காங்கேயத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு

நிலம் மீட்கப்பட்டு, சாலையோரம் தொகுப்பு மரங்கள் வளர்க்கும் திட்டத்தின்

கீழ், அங்கு மரக்கன்று நடப்பட்டது.காங்கேயம்- சென்னிமலை ரோட்டில், புதூர்

பிரிவு அருகே நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை விவசாயி

ஒருவர் ஆக்கிரமித்து பயிர் சாகுபடி செய்து வந்தார். மூன்று மாதங்களுக்கு

முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றி, நிலத்தை அளந்து,

எல்லைக்கல் நாட்டினர். பொக்லைன் மூலம் நிலம்

சீரமைக்கப்பட்டது.நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையோரம் தொகுப்பு மரங்கள்

வளர்க்கும் திட்டத்தின் கீழ், அங்கு புளி, வேம்பு, புங்கன், நாச்சல்,

தேக்கு, பாதானி, மகிழம்பு போன்ற மரக்கன்றுகள் நடுவதற்கு குழிகள்

பறிக்கப்பட்டுள்ளன. இதுபோல், வட்டமலையிலும் ரோட்டோரம் பூங்கா அமைக்கும் பணி

நடக்கிறது.