ஆசிரியர்கள் கல்விச்சுற்றுலா

திண்டுக்கல் :அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் சார்பில், ஆசிரியர்களுக்கான கல்விப்பயண துவக்க நிகழ்ச்சி நடந்தது.
கல்விப்பயண ஒருங்கிணைப்பாளர் பாலமுரளிகிருஷ்ணா வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் விஜயன் சுற்றுலா பயணத்தை துவக்கிவைத்தார்.
முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பால்ராஜ், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாகீர்உசேன் பேசினர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேணு நன்றி கூறினார். சுற்றுலாவில் 80 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இவர்களுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள வரலாறு, புவியியல், பண்பாட்டு நிலைகள், மானுடவியல் மற்றும் பொருளாதார சூழல்கள், சுற்றுச்சூழல்கள் குறித்து விளக்கப்பட்டது.