தேடல்

ஆண்டவன் கல்லூரியில் நாளை புத்தக கண்காட்சி

திருச்சி: திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் நாளை (19ம் தேதி) புத்தகக்கண்காட்சி துவங்குகிறது.
திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி பாதுகா அரங்கில், நாளை (19ம் தேதி) புத்தகக்கண்காட்சி துவக்க விழா நடக்கிறது. முதல்வர் ராதிகா தலைமை வகிக்கிறார். கல்லூரிச்செயலாளர் கஸ்தூரி ரங்கன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார்.தொடர்ந்து, 21ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கும் புத்தகக் கண்காட்சியில், இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப்படிப்புகள் மேற்கொள்ளும் மாணவர்களுக்காக, வணிகவியல், வணிக நிர்வாகவியல், நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பவியல், இயற்பியல், வேதியியல், கணிதம், விலங்கியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடப்புத்தகங்கள் இடம்பெறுகின்றன.
மேலும், கல்விப்பாட நூல்கள், வரலாறு, அரசியல், சிறுகதை, இலக்கியம், கவிதை, இலக்கணம், கட்டுரை, மருத்துவம், தன்னம்பிக்கை, பொது அறிவு, சமையல், யோகா, தியானம், உடற்கல்வி, முதலுதவி போன்ற ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம்பெறுகின்றன.பள்ளி, கல்லூரி மாணவர், ஆசிரியர், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் புத்தக கண்காட்சிக்கு இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். ஏற்பாடுகளை கல்லூரி நூலகர் லட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் உள்ளிட்டோர் செய்கின்றனர்.