ஆலங்குளம் பஞ்., யூனியன் பள்ளி ஆண்டு விழா

திருநெல்வேலி :ஆலங்குளம் பஞ்., யூனியன் தொடக்கப் பள்ளி ஆண்டு விழா, விளையாட்டு விழா நடந்தது.
ஆலங்குளம் டவுன் பஞ்., துணைத் தலைவர் தங்கசெல்வம் தலைமை வகித்தார். ஆலங்குளம் உதவி தொடக்க கல்வி அலுவலர் சண்முக சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் இம்மானுவேல் வரவேற்றார். உதவி ஆசிரியை எஸ்தர் ராணி ஆண்டறிக்கை படித்தார்.
கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் வனிதா தமிழ் செல்வி, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரிய பயிற்றுனர் ராணி எலிசபெத், பள்ளி அமைப்பு குழு அருணாசலம், பெரியமுத்து, ராமசாமி, வக்கீல் நெல்சன், வேலு உட்பட பலர் பேசினர்.
துத்திகுளம் இந்து பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ், ஆசிரிய, ஆசிரியைகள் சக்திவேல், தாணுமதி, கீதாலட்சுமி, காளீஸ்வரி, கன்னிமரியாள், மைதிலி நளினி, பாலசுந்தரம், சிவலை பாலு, தலைமை ஆசிரியர்கள் அலெக்சாண்டர், செல்வராஜ், அரிச்சந்திரன், ராஜன் உட்பட பலர் பேசினர். பரிசுகளை முருகன், மிக்கேல் வழங்கினார்.
உதவி ஆசிரியை அனிதா நன்றி கூறினார். உதவி ஆசிரியை எழிலரசி தொகுத்து வழங்கினார்.