தேடல்

ஆதிபகவனில் ஜெயம் ரவிக்கு திருநங்கை வேடமா...?

அமீர் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதிபகவன். இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நீத்து சந்திரா நடிக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உருவாகி வரும் இப்படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அந்தளவுக்கு இப்படத்தின் கதை மற்றும் கேரக்டர் ரகசியம் காக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. அத்தோடு படம் பற்றிய தகவல்களும் ஒவ்வொன்றாக வெளி வர ஆரம்பித்து இருக்கிறது. அதில் படத்தில் ஜெயம் ரவிக்கு இரட்டை வேடமாம், அதில் ஒரு வேடம் திருநங்கை வேடம் என்றும் கூறப்படுகிறது. விளையாட்டு பிள்ளையாக, காதல் நாயகனாக வலம் வந்த ஜெயம் ரவி, பேராண்மை படத்திற்கு பிறகு தனது நடிப்பை ஸ்டைலை மாற்றினார். பேராண்மை போல ஆதிபகவனும் தன்னுடைய கேரியரில் பேசப்படும் படமாக இருக்கும் என்று நம்புகிறார் ரவி.