புதுடில்லி: சிறுபான்மையினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில்ஆந்திர ஐகோர்ட் விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுத்துள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க கோரி மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
கல்வி , வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 27 சத இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு4.5 சதஉள் இட ஒதுக்கீடுவழங்கமத்திய அரசு , கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பரில் அறிவித்திருந்தது. . இதற்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசியல் உள்நோக்கம் கொண்டது என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன.
இது தொடர்பாக ஆந்திர ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கினை விசாரித்த ஐகோர்ட்,நீதிபதிகள்பி.வி.சஞ்சய் குமார், லோகூர் அடங்கிய பெஞ்ச் ,மத்திய அரசின் இந்த முடிவு மத அடிப்படையாக கொண்டது எனக்கூறி கடந்த மே 18-ம் தேதியன்று தடைவிதித்தது.
அப்பீல்: இதனைஎதிர்த்து மத்திய அரசுகடந்த 6-ம் தேதி சுப்ரீம் கோர்டில்மனு தாக்கல் செய்யப்பட்ட மனு மீது கடந்த 11-ம் தேதி நடந்த விசாரணையில் ,எந்த அடிப்படையில் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது, தேசிய பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையின கமிஷனை கலந்தாலோசிக்கவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடு கவலைஅளிப்பதாக உள்ளதாக கூறி ஆந்திரா ஐகோர்ட் விதித்த தடையைநீக்க மறுத்தது.
மீண்டும் மறுப்பு: இந்நிலையில் மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்டில் தகுந்த ஆவணங்களை தாக்கல் செய்தது. இதன் மீதான இன்று நடந்த விசாரணை நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்புவிசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் கெளரப் பானர்ஜி ஆஜரானார். இதில் ஆந்திர ஐகோர்ட் விதித்த தடையை நீக்க முடியாது எனவும்,இந்த வழக்கி்ல் மத்திய அரசு அளித்த விளக்கத்தை ஏற்க முடியாது எனவும், இது தொடர்பாக தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என மனு தாரருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் மூலம்தடை நீடித்துள்ளதால் மீ்ண்டும் சுப்ரீம் கோர்ட்டிடம் மத்திய அரசு குட்டு வாங்கியுள்ளது.
இட ஒதுக்கீடு வழக்கு: தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுப்பு: விளக்கம் கேட்டு நோட்டீஸ்
தினமலர் – பு, 13 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 18-05-2013
11 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்நயன்தாரா
5 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்அரசியல் - 18 - 05- 2013
13 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்உலகம் - 18-05 -2013
27 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்பொது- 18-05-2013
23 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சீன பிரதமர் இன்று இந்தியா வருகை
தினமலர் - 1 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை
தினமலர் - 2 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.18,422 கோடியாக வளர்ச்சி
தினமலர் - 2 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்கடந்த ஒரு வாரத்தில் மட்டும்தங்கம் சவரனுக்கு ரூ.504 குறைவு
தினமலர் - 2 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்மருத்துவ தகவல் நிர்வாக திட்டத்தில் குளறுபடி:மத்திய தணிக்கை துறை தகவல்
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

