தேடல்

இந்திய கம்யூ.,கட்சிகீழாம்பூரில் ஆர்ப்பாட்டம்

ஆழ்வார்குறிச்சி : கீழாம்பூரில் இந்திய கம்யூ., கட்சியின் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.கீழாம்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த இந்திய கம்யூ.,ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க தலைவர் சட்டநாதன் தலைமை வகித்தார். கீழாம்பூர் பஞ்., தலைவர் ஈஸ்வரன், மஞ்சள்புளி கால்வாய் பஞ்., தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், சி.பி.ஐ. மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சத்தியன், மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் கசமுத்து, மாநில விவசாய சங்க துணைத் தலைவர் பெரும்படையார், கடையம் பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் வேலாயுதம், மாவட்ட நிர்வாக குழு பரமசிவன், ஒன்றிய கவுன்சிலர் வன்னியநம்பி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கனகராஜ் உட்பட பலர் பேசினர். விவசாய சங்க பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.மழையால் பாதிக்கப்பட்ட பாப்பான்குளம் விவசாயிகளுக்கு உடனே நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பாபநாசம் முதல் ஆம்பூர் பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள ரோடு மற்றும் ஆம்பூர் ரயில்வே கேட் முதல் கருத்தப்பிள்ளையூர் வரை உள்ள ரோட்டை உடனே சரிசெய்ய வேண்டும். வீடில்லா அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஆம்பூருக்கு நிரந்தர விஏஓ நியமிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலில் உயிரிழந்த குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் சி.பி.ஐ. பகுதி செயலாளர் ராமசுப்பு, சங்கரன், சமுத்திரவேல், காமாட்சிநாதன், ஒன்றிய துணை செயலாளர் அனைவீரகண்ணு, தாலுகா விவசாய சங்க செயலாளர் சொக்கலிங்கம், காக்கநல்லூர் முன்னாள் பஞ்., தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி, பாப்பான்குளம் சுப்பையா செட்டியார், சண்முகம், வால்துரை, ஒன்றிய குழு சமுத்திரம், பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.