இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம்
கும்பாபிஷேகம்: வாசுதேவநல்லூர் புதுமந்தை தெரு சக்தி விநாயகர், பத்திரகாளியம்மன், பைரவர் கோயில் கும்பாபிஷேகம். அதிகாலை 4.30 மணி: மங்கள இசை, 5 மணி: திருமுறை பாராயணம், 4ம் கால யாக சாலை பூஜை, 8.15 மணிக்கு மேல் 9.15 மணிக்குள்: மகா கும்பாபிஷேகம், 9.30 மணி: மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், 10.30 மணி: மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கல், அன்னதானம், மாலை 5 மணி: சக்தி விநாயகர், பத்திரகாளியம்மன் திருவீதி உலா, இரவு 9 மணி: பட்டிமன்றம்.
ஜென்ம தினவிழா: சுவாமி சங்கரானந்தாவின் ஜென்ம தினவிழா. இடம்: ஐந்தருவி சங்கராஸ்ரமம், மாலை 6 மணி: ஏழை மாணவர்களுக்கு சீருடை வழங்கல்.

பொது
என்.எஸ்.எஸ்.முகாம்: புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்.சிறப்பு முகாம். உழவாரப் பணி. இடம்: மணக்காவுடையார் சுவாமி கோயில், மேலப்புளியங்குடி.

திருக்குறள் வார விழா: தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் திருக்குறள் வாரவிழா.