இருகுழந்தைகளுடன் தந்தை தற்கொலை

திருச்செங்‌கோடு: திருச்செங்கோடு அருகே தந்தை மகன், மகள் ஆகியோர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி,27, இவரது மனைவி சுதா,25 .இவர்களுக்கு ஏழுமலை,7, ஆஷா,6 ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் சின்னத்தம்பி தனது இரு குழந்தைகளுடன் வெளியே சென்றவர் வெகுரேநமாகியும் வீடு திரும்பவில்லை. பின்னர் இவர்கள் அங்குள்ள கிணற்றில் மூவரும் பிணமாக கிடந்துள்ளனர். இவர்கள் குடும்பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்து மல்லசமுத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.