தேடல்

இலங்கை தமிழர்கள் தப்ப முயன்ற வழக்கு சி.ஐ.டி.., போலீசாருக்கு மாற்ற நடவடிக்கை

புதுச்சேரி : இலங்கை தமிழர்கள் படகு மூலம் ஆஸ்திரேலியா தப்பி செல்லமுயன்ற வழக்கு, சி.ஐ.டி., போலீசாருக்கு கைமாறுகிறது.புதுச்சேரியிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல திட்டமிட்டு இருந்த 5 வயது சிறுவன் உள்பட இலங்கை தமிழர்கள் 6 பேரிடம் நேற்று இரண்டாவதுநாளாக உளவு துறை, கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.சிக்கிய இலங்கை தமிழர்கள் விடுதலைப் புலிகளா.... அவர்களின்பாஸ்போர்ட் உண்மை தானா என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.புதுச்சேரியிலிருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியா தப்பி செல்லதிட்டம் தீட்டிய ஜனாவின்மொபைல் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவரைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கிடுக்கிப்பிடி விசாரணைபெரிய காலாப்பட்டு பங்களா தெருவில் வீடு எடுத்து தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் கேரளாவில் இருந்து வந்துள்ளோம். கொக்கோ கோலா கம்பெனியில் வேலை செய்கிறோம். தினமும் காலை 9 மணிக்கு வேலைக்குப் போய் இரவு 9 மணிக்கு தான் வீட்டிற்கு வருவோம். வேளாங்கண்ணிக்குச் செல்ல திட்டமிட்டுள்ளோம் என்று முரண்பட்ட தகவல்களைச் சொல்லி வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 4 நாட்களாக தங்கியுள்ளனர். இது தொடர்பாக வீட்டு உரிமையாளரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.சி.ஐ.டி.,க்கு கைமாறுகிறது ஏஜன்ட் ஜனா மூலம் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கானோர் ஆஸ்திரேலியா தப்பி சென்றுள்ளதும், இதற்காகஇந்திய, ஆஸ்திரேலியா, ஓமன் நாடுகளில் மிகப்பெரிய நெட் வொர்க் செயல்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையில் தினமும் புதுபுது அதிர்ச்சி தகவல்கள் கிடைத்து வருவதால் வழக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைக்க, சட்டம் ஒழுங்கு போலீசார் முடிவு செய்து, உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.