தேடல்

இலவசமாய் குப்பைத்தொட்டி

மதுரை: மதுரையில் கடை வைத்திருப்போருக்கு, இலவச குப்பைத்தொட்டி வழங்க, கமிஷனர் நந்தகோபால் ஏற்பாடு செய்துள்ளார்.


மாநகராட்சியில் குப்பை ஒழிக்கும் நடவடிக்கைகள், தொடங்கியுள்ளன. குப்பையை சேகரிப்பதும், அகற்றப்படுவதும் சரிவர நடப்பதில்லை. நிறைய இடங்களில், ரோட்டில் குப்பை கொட்டப்பட்டுள்ளன. பெரும்பாலும் கடைகளில் தான், அதிகம் குப்பை சேருகிறது.

எனவே கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் இலவச பிளாஸ்டிக் குப்பைத்தொட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. கிடைக்காதவர்கள், மாநகராட்சி அலுவலகங்களை தொடர்பு கொண்டு, பெற்றுக்கொள்ளலாம்.கமிஷனர் நந்தகோபால் கூறியதாவது: கடைகளுக்கு நேரடியாக குப்பை தொட்டி வழங்கியுள்ளோம். பெரிய தொட்டி என்பதால், நிரம்பும் முன் குப்பையை சேகரித்துவிடலாம்.

அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மண்டலத்திற்கு 500 வீதம், குப்பைத்தொட்டிகள் கைவசம் உள்ளது. தேவையானவர்கள் மண்டல அலுவலகங்களை தொடர்பு கொண்டு, பெற்றுக்கொள்ளலாம், என்றார்.