இலவச கிரைண்டர், மிக்ஸி வழங்கல்

திருப்பூர் : விஜயாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன், மண்டல தலைவர் முத்துசாமி பொருட்களை வழங்கினர்; 1,712 பயனாளிகளுக்கு கிரைண்டர், மிக்ஸி, மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டது.