திண்டிவனம்:திண்டிவனத்தில் இளம்பெண்ணின் மரணம் குறித்து ஆர்.டி.ஓ.,
விசாரணை நடத்துகிறார்.திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் சிங்கார தெருவை
சேர்ந்தவர் பாஸ்கர், 31. கூட்டேரிப்பட்டில் ஒர்க் ஷாப் நடத்துகிறார்.
கூட்டேரிபட்டு சர்க்கார் கிணறு தெருவில் வசிப்பவர் மோகன் மகள் அமலா,25.
இருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நான்கு வயதில்
தேவிஸ்ரீ என்ற மகள் உள்ளார். திருமணம் ஆனதிலிருந்தே பணம் வாங்கி வருமாறு
மனைவியிடம் தகராறு செய்தார்.
ஒன்றரை ஆண்டிற்கு முன் அமலாவிற்கு சென்னை அடுத்த பொன்னேரியில் உதவி
வேளாண்மை அலுவலர் வேலை கிடைத்தது. இதற்காக மீஞ்சூரில் தங்கி வாரம்தோறும்
திண்டிவனம் வந்து சென்றார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார்.
நேற்று காலை 7.30 மணிக்கு அமலா இறந்த விவரம் அவரது தந்தை மோகனுக்கு
தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி., குப்புசாமி, இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்
இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தினர். தூங்க சென்ற அமலா காலை எழுந்து
பார்த்த போது வீட்டில் தூக்கு மாட்டி இறந்திருந்ததாக கூறினார். போலீசார்
பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அமலாவிற்கு திருமணமாகி 5
ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ., மீனா பிரியதர்ஷினி விசாரணை நடத்துகிறார்.
மோகன் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து
விசாரிக்கின்றனர்.
