இளம் வயது திருமணம் தவிர்த்தல் விழிப்புணர்வு பேரணி, கருத்தரங்கு

தர்மபுரி: நல்லம்பள்ளியில் இளம் வயது திருமணத்தை தவிர்த்தல் மற்றும்

பெண்களின் திருமண வயதை அதிகரித்தல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும்

கருத்தரங்கு நடந்தது.நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து

துவங்கிய பேரணியை யூனியன் சேர்மன் முனுசாமி துவக்கி வைத்தார். முக்கிய

வீதிகள் வழியாக சென்ற பேரணி, கருத்தரங்கு அரங்கில் முடிவுற்றது.

கருத்தரங்கிற்கு, யூனியன் சேர்மன் முனுசாமி தலைமை வகித்தார். துணை

இயக்குனர் (மருத்துவம்) தமிழரசன் வரவேற்றார்.

துணை பி.டி.ஓ.,

பாலசுப்பிரமிணயம், தாசில்தார் கமலநாதன், தலைமையாசிரியர் (பொ)

செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., பாஸ்கர் பெண்

கல்வியின் அவசியம் குறித்து பேசினார். எம்.எல்.ஏ., அன்பழகன், இளம் வயது

திருமணத்தால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதை தடுக்க வேண்டிய வழிமுறைகள்

தமிழக அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினார்.இணை

இயக்குனர் (நலப்பணிகள்) ஷானாஸ்பேகம், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்)

விஜயலட்சுமி ஆகியோர் இளம் வயது திருமணத்தால், மன ரீதியான பாதிப்பு

குறித்தும், வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்

பிரேமா, குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்கள் ஊட்டசத்து குறித்தும் ரத்த

சோகை குறித்தும் விளக்கினர்.வக்கீல் ஜெயக்கொடி, இளம் வயது திருமணத்தால்

ஏற்பாடும் சட்ட சிக்கல்கள் குறித்தும், டாக்டர் ரவி மருத்துவ ரீதியாக

பெண்களுக்கு ஏற்பாடும் பாதிப்புகள் குறித்தும் பேசினார். இதையொட்டி விடியல்

கலைக்குழு சார்பில் கலை நிகச்சிகள் நடந்தது. மாவட்ட விரிவாக்க கல்வியாளர்

காந்தா நன்றி கூறினார்.ஏற்பாடுகளை வட்டார விரிவாக்க கல்வியாளர்

கோவிந்தராஜன், ராஜேந்திரபிரசாத், சண்முகமணி ஆகியோர் செய்திருந்தனர்.