ஈராக்கில் தாக்குதல் : 32 பேர் பலி

பாக்தாத் : ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத், காதிமியா , ஆதமியா கராடா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடுகளில் 32 பேர் பலியாகி <உள்ளனர். இதில், பாக்தாத்தில் நடைபெற்ற சம்பவங்களின் மூலம் மட்டும் 22 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 100க்கும் மேற்பட்டோர் இந்த சம்பவங்களில் படுகாயமடைந்தனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.