மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே எஸ்.கீரந்தையில், தேசிய ஊரக (100 நாள்) வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் இறந்தவர், வெளிநாட்டில் உள்ளோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு முறைகேடு நடந்ததாக தாக்கலான வழக்கில், அரசு அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.எஸ்.கீரந்தை ஊராட்சி துணைத் தலைவர் கஸ்தூரி தாக்கல் செய்த மனு: தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடந்தால், குறிப்பிட்ட காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடலாடி அருகே எஸ்.கீரந்தை ஊராட்சியில், இவ் வேலைக்கான வருகைப்பதிவேட்டில் (மஸ்டர்ரோல்) சண்முகவேல், வேலுச்சாமி, ராமகிருஷ்ணன், திருஞானம் உட்பட சிலரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு வங்கி மூலம் கூலி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் யாரும் வேலை செய்யவில்லை.ஊராட்சித் தலைவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. சண்முகவேல் 2011 மே 1 ல் இறந்துவிட்டார். அவரது பெயரும் உள்ளது. பயனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கியபோது, வீரபாண்டி என்பவர் துபாயில் இருந்தார். அவரது பெயரையும் வருகைப்பதிவேட்டில் சேர்த்துள்ளனர். இம்முறைகேடுகள் குறித்து, நான் ராமநாதபுரம் கலெக்டரிடம் புகார் செய்தேன். மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஜி.எம்.அக்பர் அலி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் ராகவாச்சாரி, அரசு வக்கீல் கிருஷ்ணதாஸ் ஆஜராகினர். அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை20க்கு ஒத்தி வைத்தனர்.
ஊரக வேலையில் இறந்தவர் பெயரில் முறைகேடு :அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
தினமலர் – பு, 18 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 2 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் கெளதம்!
தினமலர் - 1 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு
தினமலர் - 1 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்சென்னை அணி விளையாடிய போட்டிகளில், சைடில் விளையாடிய மெய்யப்பன்
தினமலர் - 2 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்!
தினமலர் - 3 மணிநேரம் முன்ஆசிய கால்பந்து:இந்தியா மீண்டும் தோல்வி
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
