தேடல்

என்.எல்.சி., அதிகாரியிடம் ரூ.4 லட்சம் நகை அபேஸ்

கடலூர்:என்.எல்.சி., அதிகாரியின் மோட்டார் பைக்கிலிருந்த 4 லட்சம் மதிப்புள்ளநகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.நெய்வேலி, வட்டம் 23ஐ சேர்ந்தவர் பக்கிரி, 43; என்.எல்.சி.,யில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 5ம் தேதி உறவினர் வீட்டு திருமணத்திற்குச் செல்வதற்காக நெய்வேலியில் வங்கியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மற்றும் பனிரெண்டரை சவரன் நகை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, தனது மோட்டார் பைக்கின் டேங் கவரில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பினார். செல்லும் வழியில் இளநீர் கடையின் எதிரே பைக்கை நிறுத்தி விட்டு இளநீர் குடித்துவிட்டு மீண்டும் பைக் எடுக்க வந்தபோது, டேங்க் கவரில் வைத்திருந்த நகை மற்றும் பணத்தை காணாமல் அதிர்ச்சியடைந்தார். திருடுபோன பொருட்களின் மதிப்பு 4 லட்சம் ரூபாயாகும்.இது குறித்து பக்கிரி கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.