"எம்ஓபி பஜார்'-கைவினைப் பொருள்களின் கண்காட்சி

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஓ.பி.வைஷ்ணவா பெண்கள் கல்லூரியில் 13-ம் ஆண்டு கைவினைப் பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் சனிக்கிழமை காலை தொடங்கியது. கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் விஜயகுமார் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் ஒரு கடைக்கு 5 மாணவிகள் வீதம் 400 மாணவிகள் பங்கேற்று 80 பல்வேறு விதமான பொருள்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.
கல்லூரியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் எம்ஓபி பஜார் மூலம் எங்களால் சுயதொழில் செய்து வாழ்வில் காலூன்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என கடைகள் வைத்துள்ள மாணவிகள் உற்சாகத்துடன் கூறினர். இக்கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தும் பயன்படுத்திய பின்னர் வீசியெறியும் நிலையில் உள்ள பொருள்களில் இருந்து உருவாக்கப்பட்டவை. இப்பொருள்களை மக்கள் ஆர்வமாக கேட்கும் அளவிற்கு மாற்றி அமைத்துள்ளனர் மாணவிகள்.