எம்.எல்.ஏ., கோரிக்கை

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு விரைவு பஸ்

இயக்கக்கோரி போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வேதாரண்யம்

எம்.எல்.ஏ., காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள

அறிக்கை.நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி, மீன்பிடித்தொழில்,

பறவைகள், விலங்குகள் சரணாலயம் மற்றும் புகழ்பெற்ற வழிபாட்டு ஸதலங்கள்

உள்ளன. மேலும் தூத்துக்குடியில் இருந்து ஏராளமான மீனவர்கள் இங்கு வந்து

தங்கி மீன் பிடித்து வருகின்றனர். எனவே, இப்பகுதி மக்கள் வசதிக்காக

வேதாரண்யத்தில் இருந்து பட்டுக்கோட்டை, தொண்டி, ஏர்வாடி, தூத்துக்குடி

வழியாக புதிய திருச்செந்தூருக்கு புதிய வழித்தடத்தில் அரசு விரைவு பஸ்

இயக்க வேண்டும்.திருத்துறைப்பூண்டியில் இருந்து அருந்தவம்புலம், வடுகூர்,

காடந்தேத்தி வழியாக தலைஞாயிறுக்கு புதிய வழித்தடத்தில் சாதாரண பஸ் இயக்க

போக்குவரத்துத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.