தேடல்

எர்டிகா காருக்கு 45,000 பேர் முன்பதிவு

இந்தியாவில் மல்டி யுடிலிட்டி வைக்கிள்( எம்.பி.வி.,) காருக்கு சில ஆண்டுகளாக நல்ல வரவேற்பு உள்ளது. வாடகை கார் நிறுவனங்களும், குடும்பமாக பயணம் செய்ய விருப்புபவர்களும், இந்தகைய கார்களையே விரும்புகின்றனர். இந்தியாவில் கார் விற்பனையில் முதலிடத்தில் இருந்தாலும் மாருதி சுசூகி நிறுவனத்துக்கு, இந்த பிரிவில் எந்த மாடல் காரும் இல்லை. அந்த குறையை போக்கும் வகையில், "எர்டிகா' காரை, ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த கார், பெட்ரோல் மற்றும் டீஸல் என இரண்டு வகைகளிலும் கிடைக்கும். இந்த காரின் விலை ரூ.5.89 லட்சத்தில் இருந்து ரூ.8.54 லட்சம் வரை உள்ளது. பெட்ரோல் எர்டிகா கார், லிட்டருக்கு 16.02 கி.மீ., மைலேஜ் தரக் கூடியது. டீஸல் எர்டிகா கார், லிட்டருக்கு 20.77 கி.மீ., மைலேஜ் தருகிறது. இந்த கார், மாருதி சுசூகி நிறுவனத்தின், ஸ்விஃப்ட் காரின் பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட்டது. இந்த காருக்கு, அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு மாதங்களில், 45,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். வாடகை கார் நிறுவனங்கள், டீஸலில் இயங்கும், எர்டிகா காரையே விரும்புகின்றனர். அதற்கு காரணம், டீஸல் கார் தரும் மைலேஜ் தான். இந்த காரின் உட்புறத்தில் மூன்று வரிசையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. சவுகரியமாக ஏழு பேர் வரை பயணம் செய்யலாம். வெளிநாடுகளிலும், இந்த காருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.