முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மறவாய்க்குடியில் இரு ஒன்றியங்களின் எல்லை பிரச்னையால், ரோடு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து வசதியின்றி 4 கி.மீ., தூரம் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. முதுகுளத்தூர் அருகே பனிவாசல், மறவாய்க்குடியில் 600க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளுக்கு முதுகுளத்தூர் ஒன்றியம், பூசேரியில் இருந்து தான், பிரதான ரோடு வசதி உள்ளது. பனிவாசல், மறவாய்க்குடி, மறவாய்க்குடி காலனி ஆகிய கிராமங்கள் கடலாடி ஒன்றியத்திலும், பூசேரி, முதுகுளத்தூர் ஒன்றியத்திலும் உள்ளன. பூசேரி- மறவாய்க்குடி காலனிக்கு இடையே 500 மீட்டர் தூரம். இரு ஒன்றிய எல்லை பிரச்னையால், இணைப்பு ரோடு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பூசேரி- சிக்கல் செல்லும் வழியில் இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பயணித்து, பூசேரியில் இருந்து 4 கி.மீ., தூரம் பனிவாசல், மறவாய்க்குடி, மறவாய்க்குடி காலனிக்கு நடந்து செல்கின்றனர். இருக்கும் ரோடுகளும், கண்மாய் கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ளதால், ஆங்காங்கே சேதமடைந்து, விபத்து அபாயம் நிலவுகிறது.
மறவாய்க்குடி கருப்பையா கூறியதாவது: பூசேரி- மறவாய்க்குடி காலனி வரை, 500 மீட்டர் தூரத்திற்கு ரோடு அமைத்தால், ராமநாதபுரம், முதுகுளத்தூரிலிருந்து இயக்கப்படும் பஸ்கள் பூசேரி வழியாக பனிவாசல், மறவாய்க்குடி, மறவாய்க்குடி காலனிக்கு செல்ல முடியும். ஆனால் முதுகுளத்தூர், கடலாடி ஆகிய ஒன்றியங்களின் எல்லை பிரச்னையால், சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே ரோடு வசதி இல்லை. இப்பகுதி பொதுமக்கள், நடைபயணமாகவும், டூவீலர்களில் சென்று வருகின்றனர். போக்குவரத்து வசதியில்லாததால், இப்பகுதி மாணவர்கள் உயர் கல்வி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட, ஒன்றிய நிர்வாகங்களிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன் கூறுகையில், ரோடு இல்லாதது குறித்து புகார் ஏதும் இல்லை. ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
எல்லை பிரச்னையால் ரோடு அமைவதில் சிக்கல் : முதுகுளத்தூர் அருகே 4 கி.மீ., நடக்கும் அவலம்
தினமலர் – ச, 5 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சிக்கினார் பாக்., அம்பயர் : சூதாட்டத்தில் அசாத் ராப் ஈடுபட்டது அம்பலம் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து நீக்கம்
தினமலர் - 1 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பைனலுக்கு முன்னேறுமா ராஜஸ்தான் : இன்று மும்பையுடன் மோதல்
தினமலர் - 1 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்மற்ற அணிகளுக்கும் தொடர்பா : டில்லி கமிஷனர் அதிர்ச்சி தகவல்
தினமலர் - 1 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்அவமானத்தால் தலைகுனிவு : மத்திய அமைச்சர் வேதனை
தினமலர் - 2 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்மீண்டும் வெட்டோரி
தினமலர் - 2 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
