முத்தரப்பு கிரிக்கெட்: இந்திய அணி தோல்வி

பிரிஸ்பேன்: பிரிஸ்பேனில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணி, இலங்கையிடம் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்தது. திரிமான்னே அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார்.
பின் களமிறங்கிய இந்திய அணி சொதப்பியது. சேவக்(0), சச்சின்(22),காம்பிர்(29) விரைவில் வெளியேறினர். போராடிய விராத் கோஹ்லி(66), இர்பான் பதான்(47) ஆறுதல் அளித்தனர். இந்திய அணி 45.1 ஓவரில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. தற்போது புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா(14), இலங்கை(11) அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன. இந்தியா(10) மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.