எஸ்.எஸ்.எல்.சி தனித் தேர்வர்களுக்கு மாதிரி செய்முறை தேர்வு நாளை ஆரம்பம்

திருநெல்வேலி :நெல்லை கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தனித் தேர்வர்களுக்கு மாதிரி செய்முறை தேர்வுகள் நாளை (27ம் தேதி) ஆரம்பமாகிறது.
இந்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதுபவர்களுக்கு அறிவியல் பாடத்திற்கு செய்முறை தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு அறிவியல் பாடத்திற்கான மாதிரி செய்முறை தேர்வு நாளை (27ம் தேதி) முதல் வரும் மார்ச் மாதம் 2ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது.
நெல்லை கல்வி மாவட்டத்தில் பாளை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி, மேரி சார்ஜென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 இடங்களில் இப்பயிற்சி நடக்கிறது.
இதில் தனித் தேர்வர்கள் செய்முறை நோட்டு புத்தகங்களுடன் தவறாமல கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என்று நெல்லை கல்வி மாவட்ட அலுவலர் சண்முகம் தெரிவித்தார்.