தேடல்

‌‌‌ஏற்றத்தில் தொடங்கியது வர்த்தகம்

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72.21 புள்ளிகள் அதிகரித்து 16932.01 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 19.85 புள்ளிகள் அதிகரித்து 5123.70 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று, ஓரளவிற்கு நன்கு இருந்தது. ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்காததாலும், 'பிட்ச்' நிறுவனம், இந்தியாவின் தரக் குறியீட்டை குறைத்ததாலும், திங்களன்று வர்த்தகம் சுணக்கம் கண்டது.இந்நிலையில், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.