ஏழுமலை பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரம்:சென்னை பிரேக்ஸ் இன் டியா நிறுவனம் சார்பில் ஏழுமலை

பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.விழுப்புரம் ஏழுமலை

பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில்

இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்கான பணி நியமண ஆணையை பிரேக்ஸ் இன்டியா நிறுவன அதிகாரி பாண்டுரங்கன்,

கல்லூரி முதல்வர் ரகோத்தமன் முன்னிலையில் வழங் கினார். இந்நிகழ்ச்சியில்

கல்லூரி நிர்வாக அலுவலர் கணேசன், பணி அமர்வு அலுவலர் காஞ்சனா,

பொறுப்பாசிரியர் சரவணக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.