முதுநகர்:கடலூர் சிறையில், தொடர்ந்து, 17ம் நாளாக உண்ணாவிரதத்தில்
ஈடுபட்டுள்ள மாவோயிஸ்ட் விவேக், கோர்ட்உத்தரவின்படி மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார்.தேனி, பெரியகுளம் முருகமலை வனப்பகுதியில், ஆயுதப் பயிற்சி
கொடுத்த வழக்கில், மாவோயிஸ்ட் விவேக், 47, கைது செய்யப்பட்டு, கடலூர்
மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி, கடந்த, 6ம் தேதி முதல், சிறையில்உண்ணாவிரதத்தில்
ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில், அவர் நண்பர் கோபால், சென்னை ஐகோர்ட்டில்
தாக்கல் செய்த மனுவில், சிறையில் கடந்த 6ம் தேதி முதல் உண்ணாவிரதத்தில்
உள்ள விவேக், தனிமை சிறையில் அடிப்படை வசதிகள் இன்றி உள்ளதாகவும், அவரது
உடல்நிலை மோசமடைவதைத் தவிர்க்க, மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும்
கூறியிருந்தார்.
மனு மீதான விசாரணையைத் தொடர்ந்து, ஐகோர்ட், டிவிஷன்
பெஞ்ச் விவேக்கிற்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை
அளிக்க உத்தரவிட்டது.விவேக், சிகிச்சைக்காக நேற்று காலை, 8.15 மணிக்கு,
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து, 17ம்
நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள விவேக்கிற்கு, மருத்துவமனை தீவிர
சிகிச்சைப் பிரிவில், வலுக்கட்டாயமாக, குளூக்கோஸ் ஏற்றப்பட்டு
வருகிறது.காவல் நீட்டிப்புவிவேக்கின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்ததைத்
தொடர்ந்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் பெரியகுளம் மாஜிஸ்திரேட் கோர்ட்
நீதிபதியிடம் கூறப்பட்டது. வரும் 28ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து
நீதிபதி உத்தரவிட்டார்.
