ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு எதிரானது : உள்துறை அமைச்சகம்

புதுடில்லி : ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு எதிரானது என்று மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. ஓரினச்சேர்க்கையின் மூலம் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் நோய் அதிகளவில் பரவுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாது, டில்லி ஐகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், உள்துறை அமைச்சகத்திற்கு எதிராக சுகாதாரத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.