தேடல்

கடல் காற்றால் வெப்பளவு குறைந்தது

சென்னை:கடல் காற்றால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில், நேற்று, வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.தமிழகத்தில் புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. கடல் காற்றும் வீசியதால், பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. அதிகபட்சமாக, மதுரை, 102, பாளையங்கோட்டை, 101, திருச்சியில், 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதி உள்ளிட்ட, பல இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டைவிட, குறைவாக வெப்பம் நிலவியது.சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த, 24 மணி நேரத்தில், இளுப்பூரில், 4, கேட்டியில், 3, குன்னூர், கீரனூரில், தலா, 2 செ.மீ., மழை பெய்தது. அடுத்த, 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில், இடியுடன் மழை பெய்யக் கூடும். சென்னையில், மாலை அல்லது இரவில், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, என்றார்.