கன்னியாகுமரி-நாகர்கோவில் மினிமாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்

நாகர்கோவில் :கன்னியாகுமரிமாவட்ட மினிமாரத்தான் போட்டியில் 21 கி.மீ., தூர ஓட்டபந்தய போட்டியில் பொள்ளாச்சியை சேர்ந்த வாலிபர் முதல் பரிசை தட்சென்றார்.
தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் குமரி மாவட்ட தடகள சங்கம் சார்பில் நேற்று நாகர்கோவிலில் மினிமாரத்தான் போட்டி நடந்தது.

கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் ஸ்÷டியம் வரை 21கி.மீ., தூரஒட்டபந்தய ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட போட்டியும், சுசீந்திரம் முதல் ஸ்டேடியம் வரை 8கி.மீ., தூர ஆண்கள்,பெண்கள்மற்றும் 50வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட ஓட்டபந்தயபோட்டிகளும், நாகர்கோவில் ரயில்வேஸ்டேசன் முதல் ஸ்டேடியம் வரை ஆண்கள், பெண்கள் கலந்து கொண்ட ஓட்டபந்தயபோட்டிகளும் நடந்தது.
இப்போட்டியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர். கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வரை உள்ள 21கி.மீ., ஓட்டபந்தபோட்டியில் பொள்ளாச்சியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் முதலிடம் பெற்று சாதனைபடைத்தார்.இரண்டாவது இடத்தை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொன்மாரியும்,மூன்றாவது இடத்தை மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஜோஸ் என்பவரும் பெற்றனர்.

அதுபோன்று சுசீந்திரம் பகுதியில் இருந்து நாகர்கோவில் வரை 8கி.மீ., தூரஒட்டபந்தயபோட்டியில் ஆண்கள் பிரிவில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மனோ முதலிடத்தையும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் இரண்டாம்இடத்தையும், அதே மாவட்டத்தை சேர்ந்த முத்துகுமார் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் கோவை மாவட்டத்தை சேர்ந்த பத்மாவதி முதலிடத்தையும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அபிராமி இரண்டாம் இடத்தையும், கோவை மாவட்டத்தை சேர்ந்த தனபிரியா மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
50வயதுக்கு மேற்பட்ட பிரிவில் யூஜின்ஆல்பர்ட் முதலிடத்தையும், தேசிகாமணி இரண்டாவது இடத்தையும், அப்பாவு மூன்றாவது இடத்தையும் பெற்றனர். இதில் ஐ.ஜி., சைலேந்திரபாபுவும் ஓடி, 7-வது இடத்தை பெற்றார்.
நாகர்கோவில் ரயில்வே ஸ்டேசன் பகுதியில் இருந்து ஸ்டேடியம் வரை உள்ள 5கி.மீ., தூர பள்ளி மாணவ,மாணவயர்களுக்கான ஒட்டபந்தய போட்டியில் ஆண்கள் பிரிவில் வாவறை பகுதியை சேர்ந்த சாகா முதலிடத்தையும், பிரவின் இரண்டாம் இடத்தையும், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சதீஷ் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். அதுபோன்று பெண்கள் பிரிவில் கன்னியாகுமரியை சேர்ந்த ஸ்ரீஜா முதலிடத்தையும், அதே பகுதியை சேர்ந்த ஷகிராபானு இரண்டாம் இடத்தையும்,சூசன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

பின்னர் ஸ்டேடியத்தில் நடந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தடகள சங்க தலைவர் தேவாரம் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
தடகளசங்கம் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கு பெற்று வருகின்றனர். போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் மாநில அளவில் மட்டுமின்றி இந்தியஅளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொள்ளவேண்டும். மேலும் சர்வதேச அளவில் பங்கு பெற்று முதலிடம் பெற்று நம்நாட்டிற்கு பெருமை தேடி தரவேண்டும். இவ்வாறு தேவாரம் கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தடகள சங்க துணைதலைவர் ஆறுமுகம், செயலாளர் ராஜேந்திரன், துணைதலைவர் சைலேந்திரபாபு, போலீஸ் டி.ஐ.ஜி., ஜாண்நிக்கல்சன், மாவட்ட கலெக்டர் நாகராஜன், மாவட்ட எஸ்.பி.,பிரவேஷ்குமார், முன்னாள் எம்.பி., பாலன், மாவட்ட தடகளசங்க செயலாளர் ராஜூ, சீனியர் துணைதலைவர் ஞானகுமார்சுரேஷ், சுகதேவ், அரவிந்த்குமார், துணைசெயலாளர் முத்துராமன், அரிராமஜெயம், பொருளாளர் பிரிட்டோஜாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஓருங்கிணைப்பாளர் டேவிட்சன்ஜோஸ்லின் நன்றி கூறினார்.