புதுடில்லி: சென்ற டிசம்பர் மாதத்தில், உள்நாட்டில், 17 ஆயிரத்து 286 கோடி ரூபாய் மதிப்பிற்கு கனிமங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி மதிப்பு, சென்ற நவம்பர் மாதத்தில் 15 ஆயிரத்து 692 கோடி ரூபாய் மதிப்பிற்கு இருந்தது என, மத்திய கனிமங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், நிலக்கரி, இரும்புத் தாது, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, தோரியம் உள்ளிட்ட, 87 வகையான கனிமங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மொத்த கனிமங்களில், கச்சா எண்ணெய் உற்பத்தி மதிப்பு, 5,725 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நவம்பரில், 5,567 கோடி ரூபாயாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், நிலக்கரி மற்றும் இரும்புத் தாது உற்பத்தி மதிப்பு முறையே, 5,292 கோடி ரூபாய் மற்றும் 3,227 கோடி ரூபாய் என்றளவில் உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நவம்பரில் முறையே, 4,628 கோடி மற்றும் 2,788 கோடி ரூபாயாக இருந்தது.மேலும், இவைகளின் உற்பத்தியும் முறையே, 11.45 சதவீதம் வளர்ச்சிகண்டு, 4.81 கோடி டன்னிலிருந்து, 5.36 கோடி டன்னாகவும், 8.97 சதவீதம் உயர்ந்து, 1.21 கோடி டன்னிலிருந்து, 1.36 கோடி டன்னாகவும் அதிகரித்துள்ளது.தங்கம் உற்பத்தி, சாதனை அளவாக, 47.41 சதவீதம் உயர்ந்து, 108 கிலோவிலிருந்து, 171 கிலோவாக அதிகரித்துள்ள நிலையில், வைரம் உற்பத்தி, 26.77 சதவீதம் சரிவடைந்து, 1,499 காரட் அளவிலிருந்து, 2,047 காரட்டாக குறைந்துள்ளது.சென்ற 2010-11ம் முழு நிதியாண்டில், நாட்டில், கனிமங்களின் உற்பத்தி (அணு உலைகளில் பயன்படுத்தப்படும் கனிமங்கள் தவிர) மதிப்பு, 11.83 சதவீதம் வளர்ச்சிகண்டு, 2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கனிமங்களின் உற்பத்தி மதிப்புரூ.17,286 கோடியாக உயர்வு
தினமலர் – வி, 23 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- கனிமங்கள் உற்பத்தி மதிப்பு ரூ.19,000 …
- நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில்...பரஸ்பர …
- யூனியன் பேங்க் லாபம் 29 சதவீதம் …
- கைவினை பொருட்கள்ஏற்றுமதி இலக்கு ரூ.16,000 …
- பஞ்சாப் நேஷனல் பேங்க்டெபாசிட் 21 …
- இயற்கை ரப்பர் உற்பத்தி 7 சதவீதம் …
- பார்தி ஏர்டெல்: டிவிடெண்டு அறிவிப் …
- நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில்...நாட்டின் …
- தாபர் இந்தியாநிகர லாபம் ரூ.171 …
- மத்திய அரசின் கடன் ரூ.35 லட்சம் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 46 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 47 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 47 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 48 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
