தேடல்

கனேரியாவுக்கு ரூ. 90 லட்சம் அபராதம்

லண்டன்:சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் கனேரியாவுக்கு, ரூ. 90 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.இங்கிலாந்தில் 2009ல் நடந்த உள்ளூர் போட்டியில், பாகிஸ்தானின் கனேரியா, இங்கிலாந்தின் வெஸ்ட்பீல்டு, இணைந்து ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டது அம்பலமானது. இதில் மெர்விக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.கனேரியாவின் குற்றம் சமீபத்தில் நிரூபணம் ஆனது. இதையடுத்து, இங்கு நடக்கும் கவுன்டி உட்பட எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கக் கூடாது என, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இ.சி.பி.,) கனேரியாவுக்கு ஆயுட் கால தடைவிதித்தது. இதை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக கூறினார் கனேரியா. இதனிடையே இவருக்கு தடையுடன் சேர்த்து, ரூ. 90 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.ஒருவேளை அப்பீல் செய்து வழக்கில் வெற்றிபெறவில்லை என்றால், கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடுவதுடன், இந்த அபராதத்தையும் சேர்த்து கட்ட வேண்டிய நிலை ஏற்படும்.---