தேடல்

கம்ப்யூட்டர் கண்காட்சி இன்று துவங்குகிறது

திருப்பூர் : திருப்பூர் தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு (டிஐடிஏ) சார்பில்,

கம்ப்யூட்டர் கண்காட்சி இன்று துவங்குகிறது; வரும் 29 வரை நடைபெறுகிறது.

கம்ப்யூட்டர் மற்றும் அதுசார்ந்த பொருட்கள் விற்பனை மற்றும் ஆலோசனைகள்

தரும் நிறுவனங்கள் இணைந்து திருப்பூர் தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பை

நிறுவியுள்ளன. இக்கூட்டமைப்பு சார்பில், திருப்பூர் பகுதியில் கம்ப்யூட்டர்

உபகரணங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் கம்ப்யூட்டர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு கண்காட்சி, திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் ரோட்டிலுள்ளஹார்வி

குமாரசாமி திருமண மண்டபத்தில் இன்று துவங்கு

கிறது. வரும் 29 வரை, தினமும் காலை 10.00 முதல் இரவு 8.00 மணி வரை கண்காட்சி நடைபெறும்.

இதில், லேப்-டாப், ஐபேடு, டேப்லட், கம்ப்யூட்டர்கள், பிரின்டர்கள்,

யுபிஎஸ், ஸ்கேனர், கம்ப்யூட்டர் துணை பொருட்கள், பயன்படு பொருட்கள் மற்றும்

உதிரி பாகங்கள் முதலியன விற்பனைக்காகவும், காட்சிக்

காகவும் வைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணி வகிக்கும்

சோனி, லெனோவா, எச்பி, டெல், கேனான், தோஷிபா, சாம்சங், எல்ஜி முதலிய முன்னணி

நிறுவனங்களின் நேரடி விற்பனை நடைபெறும்.

இக்கண்காட்சியின் முதன்மை ஆதரவாள

ராக லெனோவா நிறுவனம், துணை ஆதரவாளராக இன்டெல் மற்றும் டெல் நிறுவனங்கள்

உள்ளன. மாதாந்திர தவணை திட்டத்தில் கம்ப்யூட்டர் பொருட்கள் விற்பனை

செய்யப்படும், என, திருப்பூர் தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு கண்காட்சி

குழு தெரிவித்துள்ளது.