தேடல்

கல்குவாரி குட்டையில் மூழ்கி இருவர் பலி

மதுரை : மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 பேர் பலியான சம்பவம், அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை அடுத்த யானைமலையை சேர்ந்தவர் பாண்டி, இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மகன் அய்யப்பன் (11). இவர் மனநிலை குன்றியவர். இப்பகுதியில் கோயில் திருவிழா நடைபெற்று வருவதால், அய்யப்பனின் உறவினர் மகன் விஷ்ணுகுமார் (17) ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில், அய்யப்பன் மற்றும் விஷ்ணுகுமார் அருகிலுள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றனர். எதிர்பாராதவிதமாக, அவர்கள் அதில் மூழ்கி இறந்தனர். இதுகுறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.