பந்தலூர் : பந்தலூர் அருகே தேவலாவில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர்
கைது செய்யப்பட்டார். தேவாலா புதியகுன்னு பகுதியில் கள்ளச்சாராயம்
விற்பனை செய்வதாக தேவாலா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து
சப்-இன்ஸ்பெக்டர் பசுவராஜ் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது புதியகுன்னு பகுதியில் பாலகிருஷ்ணன்(42) என்பவர் கள்ளச்சாராயம்
விற்பனை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு;
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாரயம் பறிமுதல் செய்யப்பட்டது.
