கள்ள நோட்டு பறிமுதல்காங்., பிரமுகர் கைது

இரும்பாலை: மேட்டூர் புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மகன்

சுப்ரமணி (42). காங்கிரஸ் பிரமுகர். அவர், கள்ள நோட்டுகளை புழக்கத்தில்

விடுவதாக, இரும்பாலை போலீஸாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, இன்ஸ்பெக்டர்

சுரேஷ்குமார் தலைமையில் போலீஸார், கொண்டலாம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, கள்ள

நோட்டுக்களை மாற்ற முயன்ற சுப்ரமணியை, நேற்று கையும் களவுமாக பிடித்னர்.

அவரிடம், இரண்டு, 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் இருப்பது கண்டுபிடித்து,

பறிமுதல் செய்தனர்.விசாரணையில், இருவரிடம் ஒரிஜினல் பணத்தை பெற்றுக்

கொண்டு, இரட்டிப்பு தொகையாக, கள்ள ரூபாய் நோட்டுக்கள் வழங்கியதை சுப்ரமணி

ஒப்புக்கொண்டார். போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.