கள்ளத்தனமாக பெட்ரோல் விற்றவர் கைது

திட்டக்குடி:ராமநத்தம் அருகே கள்ளத்தனமாக பெட்ரோல் விற்றவர் கைது

செய்யப்பட்டார்.ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர் மதனகோபால் ரோந்துப் பணியில்

ஈடுபட்டிருந்த போது ராமநத்தம் அடுத்த கீழக்கல்பூண்டியைச் சேர்ந்த ராமநாதன்,

54; என்பவர் பெட்ரோல் வாங்கி தனக்குச் சொந்தமான கடையில் கள்ளத்தனமாக

விற்று வந்தது தெரியவந்தது.உடன் அவரை கைது செய்து 4 லிட்டர் பெட்ரோலை

கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.