தேடல்

கே.எஸ்.ஆர்., பாலிடெக்னிக் வாரியத்தேர்வில் 100 % தேர்ச்சி

திருச்செங்கோடு: கே.எஸ்.ஆர்., பாலிடெக்னிக், கே.எஸ்.ரங்கசாமி தொழில் நுட்ப

பயிலகம் மாணவ, மாணவியர் வாரியத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று

சாதனை படைத்துள்ளனர். திருச்செங்கோடு, கே.எஸ்.ரங்கசாமி தொழில் நுட்ப

பயிலகத்தின் சிவில் துறை மாணவர் மணிகண்டன், 600க்கு 595, மெக்கானிக்கல்

துறை மாணவர் தேவேந்திரன், 582, மின்னியல் துறை மாணவர் அசோக், 577,

மின்னணுவியல் துறை மாணவி சங்கீதா, 579, கம்ப்யூட்டர் துறை மாணவி நந்தினி,

591, இன்பர்மேஷன் டெக்னாலஜி துறை மாணவர் சபரீஸ்வரன், 587, கம்ப்யூட்டர்

நெட் ஒர்க்கிங் துறை மாணவர் ரமேஷ் ராஜா, 586, டெக்ஸ்டைல்ஸ் துறை மாணவர்

வடிவேல், 565 மதிப்பெண் பெற்று வாரியத் தேர்வில், கல்லூரியில் முதலிடம்

பெற்று சாதனை படைத்துள்ளனர். முதலாம் ஆண்டு மாணவர்கள் அசோக்குமார், 900க்கு

849 மதிப்பெண் பெற்று முதலிடமும், அருண் சந்தோஷ், 822 மதிப்பெண் பெற்று

இரண்டாமிடமும், டானா சஞ்சய்தாரா, 818 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும்

பெற்றனர். திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., பாலிடெக்னிக் கல்லூரி சிவில் துறை

மாணவர் கார்த்திக், 600க்கு 598ம், ஆட்டோ மொபைல் துறை மாணவர்

செங்கோட்டுவேல், 591ம், மெக்கானிக்கல் துறை மாணவர் விக்னேஷ், 593ம்,

மின்னியல் துறை மாணவர் நல்லதம்பி, 587ம், மின்னணுவியல் துறை மாணவி ஹேமாவதி,

595ம், இன்பர்மேஷன் டெக்னாலஜி துறை மாணவர் வினோத்குமார், 590ம்,

டெக்ஸ்டைல்ஸ் துறை மாணவர் பாலசுப்ரமணி, 580 மதிப்பெண் பெற்று கல்லூரியில்

முதலிடம் பிடித்தனர். முதலாம் ஆண்டு மாணவி ஹரிணி பிரியா, 900க்கு 853

மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவர் கணேஷ் பிரபு, 839 மதிப்பெண் பெற்று

இரண்டாமிடமும், மாணவர் வசந்த்குமார், 834 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும்

பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை கல்வி நிறுவன தாளாளர் ரங்கசாமி,

செயலாளர் சீனிவாசன், முதல்வர்கள் குழந்தைவேல், மகுடேஸ்வரன் ஆகியோர்

பாராட்டினர்.