தேடல்

கதை கேட்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும் உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்க ஆரம்பித்து இருக்கிறார். தயாரிப்பாளராக இருந்து நடிகர் அவதாரம் எடுத்திருக்கும் உதயநிதி நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி படம் ஏப்ரம் 13-ம் முதல் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இந்நிலையில் உதயநிதி, தற்போது புதிய படத்தில் நடிப்பதற்காக கதை கேட்கும் பணியில் இறங்கியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், தொடர்ந்து நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். தொடர்ந்து 2 அல்லது 3 நகைச்சுவைப் படங்களில் நடித்துவிட்டு பிறகு வேறு அம்சங்கள் கொண்ட படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளேன். சந்தானத்திற்கும், ஹன்சிகா மோத்வானிக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். படப்படிப்பின் போது எனக்கு நிறைய ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். எனக்கு காமிரா முன்பு நிற்பதும், வசனம் பேசுவதும் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், படக்குழுவினர்தான் எனக்கு பெரிதும் உதவினார்கள், என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்