தேடல்

கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

கம்மாபுரம்:பாலக்கொல்லை, அரசக்குழி ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு

விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கம்மாபுரம் ஒன்றிய ஊராட்சிகளில் அரசு ஆரம்ப

சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் கொசு ஒழிப்பு

விழிப்புணர்வு ஊர்வலம் நடந்து வருகிறது.அரசக்குழி ஆரம்ப சுகாதார நிலையம்

சார்பில் கெங்கைகொண்டான் பேரூராட்சி, வடக்குவெள்ளூர், இருப்புகுறிச்சி,

ஊ.கொளப்பாக்கம், ஊத்தாங்கால், முதனை, ஊமங்கலம், ஊ.அகரம்,

காட்டுக்கூனங்குறிச்சி, அம்மேரி, கொல்லியிருப்பு ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு

விழிப்புணர்வு ஊர்வலங்கள் நடந்தன.ஊர்வலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய

டாக்டர் தமிழரசன், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஊர்வலத்தில்

கொசு உற்பத்தியை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை

மாணவ, மாணவிகள் ஏந்தியபடி கோஷமிட்டுச் சென்றனர்.

சுகாதார ஆய்வாளர்கள் கார்த்திகேயன், பத்தராச்சலம் ஆசிரியர்கள், ஊராட்சித்

தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.அதேப்போன்று பாலக் கொல்லை

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த கொசு ஒழிப்பு விழிப்புணர்வு

ஊர்வலத் தில் டாக்டர் பிரகாஷ்ராஜ், சுகாதார ஆய்வாளர் கள் பக்தவச்சலம்,

பழனிவேல், பகுதி சுகாதார செவிலியர் இளமதி மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட

பலர் பங்கேற்றனர்.